ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி,

மதுரை-14. அலைபேசி: 99440 02365.

Advertisment

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- கன்னி.

2-9-2019- துலாம்.

Advertisment

5-9-2019- விருச்சிகம்.

7-9-2019- தனுசு.

கிரக பாதசாரம்:

சூரியன்: பூரம்- 1, 2, 3.

செவ்வாய்: பூரம்- 1, 2.

புதன்: பூரம்- 2, 3, 4, உத்திரம்- 1, 2.

குரு: கேட்டை- 2.

சுக்கிரன்: பூரம்- 2, 3, 4.

சனி: மூலம்- 4.

ராகு: திருவாதிரை- 4.

கேது: பூராடம்- 2.

கிரக மாற்றம்:

சுக்கிரன் அஸ்தமனம்.

2-9-2019- சனி வக்ரநிவர்த்தி.

7-9-2019- கன்னி புதன்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் 5-ல் திரிகோணம். அவருக்கு வீடுகொடுத்த சூரியன் அங்கு ஆட்சி! செவ்வாய்க்கு சாரம்கொடுத்த சுக்கிரன் (பூர நட்சத்திரத்தில் செவ்வாய்) அவருடன் சேர்க்கை! எனவே உங்கள் எண்ணங்களும் திட்டங் களும் மிகமிக எளிதாக ஈடேறும். ஒரு காரியத்தை நிறைவேற்றும்போது அதிகமாக சிரமப்பட்டு சாதிப்பதென்பது ஒரு வழி! மிகமிக எளிதாக சிரமப்படாமல் சாதிப்பதென்பது இன்னொரு வழி! இந்த கோட்சார கிரக அமைப்பு அந்த இரண்டாவது வழியில் நிறைவேறும். "காக்கை உட்கார பனம் பழம் விழுந்த கதை' என்றும் சொல்லலாம் அல்லது "கும்பிடப்போன தெய்வம் எதிரில் உலா வந்தது' என்றும் சொல்லலாம். அதற்கு உறுதுணையாக 10-க்குடைய சனி 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். எனவே தொழில்துறையிலும் வாழ்க்கை அமைப்பிலும் பொருளாதாரத்திலும் எந்த இடையூறுகளும் இல்லாமல், நான்கு வழிச்சாலை டிரங் ரோட்டில் ஸ்பீடு பிரேக்கர் போன்ற எந்த இடையூறும் இல்லாமல் 100 கிலோமீட்டர் வேகத்தில் "ஜல்' என்று பயணம் போவதுபோல உங்கள் திட்டங்களும் காரியங்களும் வேகமாக நிறைவேறும். அதேசமயம் பாக்கியாதிபதி குரு 8-ல் மறைந்து 12-ஆம் இடத்தைப் பார்ப்பதால் (அவரே 12-க்குடையவர் என்பதால்) சற்று அதிக செலவில் ஒவ்வொரு செயலையும் நிறைவேற்றவேண்டும். அதாவது பிடித்த மான பொருளை வாங்கும்போது பேரம் பேசாமல் கடைக்காரர் சொன்ன விலைக்கே வாங்குவதில்லையா- அதுபோலதான்! உதாரணமாக பெண் அழகு, படிப்பு, குடும்பச் சூழ்நிலை எல்லாம் திருப்திகரமாக அமைந்துவிட்டால் மாப்பிள்ளை வீட்டார் செய்முறையில் கண்டிஷன் போடாமல் தலையாட்டுவதுபோல!

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 4-ல் கேந்திரம். சொந்த நட்சத்திரம். அவருக்கு வீடுகொடுத்த சூரியனும் அங்கு ஆட்சி! சுக்கிரன் சாரம். (பூரம்). அவருடன் சேர்ந்துள்ள செவ்வாயும் புதனும் சுக்கிரன் சாரம் (பூசம்). எனவே உங்கள் மதிப்பு, மரியாதை, செல்வாக்குக்கு எந்தக் குறையும் ஏற்படாது. "குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா' என்று பாடியமாதிரி எந்தக் குறையும் இருக்காது. எல்லாம் நிறைவே! திருமணமாகாதவர் களுக்குத் திருமண யோகம். வாரிசு இல்லாதவர்களுக்கு வாரிசு யோகம்! வேலை இல்லாதோருக்கு படிப் புக்கேற்ற வேலை- திருப்தி யான சம்பளம்! சொந்தத் தொழில் செய்கிறவர்களுக்கு தொழில் வளர்ச்சி, மேன்மை, லாபம்! போட்டி, பொறாமை இல்லாத முன்னேற்றம்! புதுத் தொழில் ஆரம்பம், பழைய தொழில் மேன்மை, பதவியில் உயர்வு என்று எல்லாம் சிறப்பாக அமையும். ரிஷப ராசிக்கு அட்டமச்சனி நடந்தாலும் 7-ல் குரு அமர்ந்து ராசியைப் பார்ப்பதால், பொங்குசனியாகப் பொலிவைத் தரும்; பூரிப்பைத் தரும். புளங்காங் கிதம் உண்டாகும். 2-ல் ராகு- 8-ல் கேது இருப்பதால், சில நேரங்களில் பொருளாதாரத்தில் தேக்கமும் சிக்கலும் ஏற்பட்டாலும், கிணற்றில் இறைக்க இறைக்க ஊற்று ஊறுவதுபோல வற்றாமல் நீர் ஊறி தேவைகளைப் பூர்த்தி செய்யலாம். சிலசமயம் ஊற்று ஊறும்வரை காத்திருந்து இறைக்கும்படி ஆகும். ஊற்றுள்ள கிணற்றில் ஒரு அளவுவரை ஊறி நிறைவாகும். பொங்கி வழியாது. (பால் பொங்குவதுபோல). அதுதான் குரு ரிஷப ராசியைப் பார்த்த பெருமை! மேலும் லாபாதிபதி குரு லாபஸ் தானத்தைப் பார்ப்பதும் நஷ்டத்துக்கே இடமில்லை என்பதை சுட்டிக்காட்டும்!

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசிநாதன் புதன் 3-ல் மறைவு. என்றாலும் அவருக்கு மறைவு தோஷம் ஏற்படாது. ஏனென்றால் புதனுக்கு சாரம்கொடுத்த கிரகம் சுக்கிரன் (பூரம் சாரத்தில் புதன்), புதனுக்கு வீடு கொடுத்த சூரியன் இருவரும் புதனோடு சம்பந்தம். அவருடன் சம்பந்தப்பட்ட செவ்வாயும் மற்ற வர்களும் சுக்கிரன் சாரம்தான். சுக்கிரன் திரிகோணாதிபதி ஆவார். 5, 9 என்ற திரி கோணத்தில் நிற்கும் கிரகமும், திரிகோணா திபதியுடன் சேர்ந்துள்ள கிரகமும் 6, 8, 12 என்ற மறைவு தோஷத்தைச் செய்யாது. விதிவிலக்காகும்! எப்படி? ஒருவழிப்பாதையில் அவசர நிமித்தம் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டி, போலீஸ் வேன் போகலாம். இரவு 10.00 மணிக்குமேல் எல்லா வாகனங்களும் போகலாம். இது விதி விலக்கு! அதுபோல கிரகங்களுக்கும் விதிவிலக்கு பலவகையில் ஏற்படும். நீசம்பெற்ற கிரகம் நீசபங்கமடையும். பகைபெற்ற கிரகம் தற்காலிக நட்பாக மாறும். இவையெல்லாம் விதிவிலக்கு! ஜென்ம ராகுவும் சப்தம கேது- சனியும் திருமணத் தடையை உருவாக்கலாம். அல்லது திருமணமானவர்களுக்குள் (தசாபுக்தி பாதகமாக இருந்தால்) வம்பு வழக்கு, கருத்து வேறுபாடு, மோதல்களை உருவாக்கலாம். அல்லது பிரிவினையை ஏற்படுத்த லாம். ஒருவகையில் பிரிவு அன்பை வளர்க்கும். மேல்நாட்டு அறிஞர், "கணவர்- மனைவிக்குள் பாசமும் பற்றும் ஏற்பட விடுமுறை எடுத்துக் கொள்ள வேண்டும்' என்று சொன்னார். அதையே வள்ளுவரும், "ஊடுதல் காமத்திற்கின்பம் அதற் கின்பம் கூடி முயங்கப்பெறின்' என்று சொன்னார். தினசரி பார்த்துப் பழகிப் பேசிக்கொண்டிருக்கும் கணவன்- மனைவி வெளியூர் சென்று வந்தபிறகு பாசமும் நேசமும் அதிகரிக்கும் என்பது அனுப வத்தில் காணும் உண்மையாகும்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

weekrasi

கடக ராசிக்கு 5-ல் குரு நின்று ராசியைப் பார்க்கிறார். குரு 6, 9-க்கு டையவர். 6-ஆமிடம் என்பது கடன், போட்டி, பொறாமை, சத்ரு ஸ்தானம் என்று சொல்லப்பட்டாலும், தொழில், வாழ்க்கை ஸ்தானம் எனப்படும். 10-ஆமிடத்துக்கு 9-ஆமிடம் பாக்கிய ஸ்தானமாகும். எனவே, உங்கள் வாழ்க்கை யிலும் அல்லது தொழில்துறை யிலும் பிரச்சினைகள் இருந்தாலும் பாதிப்புக்கு இடமில்லாத வகையில் அனுகூலமும் முன்னேற்றமும் உண்டாகும். எந்தவொரு காரியத் திலும் கஷ்டமில்லாமல் வெற்றி என்பது வருவதில்லை. கடும் முயற்சிகளுக்குப் பிறகு அடையும் வெற்றி நிலையான இன்பத்தையும் மனநிறைவையும் தரும். எளிதாக அடையும் வெற்றிக்கு முக்கியத் துவம் இருக்காது. இது அனுபவப்பூர்வ மான உண்மையாகும். முயற்சி என்பதுதான் 6-ஆமிடம். நினைத்த வெற்றி, நிம்மதி என்பது 9-ஆமிடம். 12-ல் உள்ள ராகு பயணங்களையும் அலைச்சல்களையும் தந்தாலும், அதில் ஆதாயமும் அனுகூலமும் அமையும். கிராமத்தில் ஒரு பழமொழி சொல் வார்கள்- "ஆதாயமில்லாத செட்டியார் ஆத்தோடு போவாரா' என்று. 10-க்கு டைய செவ்வாய் 9-க்குடைய குருவைப் பார்ப்பது தர்மகர்மாதிபதி யோகம். அதனால் குருவருளும் திருவருளும் பரிபூரணமாக உங்களுக்கு உதவும். உங்கள் முயற்சிகளில் குறுக் கீடுகளையும் தடைகளையும் தளர்ச்சிகளையும் விலக்கி வெற்றி வாய்ப்பினை உருவாக்கும்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிநாதன் சூரியன் ஆட்சி. அவரோடு சூரியனுடைய உச்ச ராசிநாதன் செவ்வாய் சேர்க்கை. 2, 11-க்குடைய புதனும், 3, 10-க்குடைய சுக்கிரனும் சேர்க்கை. உத்தி யோகத்தில் இருப்பவர்களும், சொந்தத் தொழில் செய்கிறவர்களும், அரசாங்கப் பணியில் இருப்பவர்களும் முன்னேற்றத்தை நோக்கிப் பயணிப்பார்கள். குடும்பஸ்தர் களுக்கு குறைவில்லாத நிறைவான பலன்கள் உண்டாகும். கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர் களுக்கு சிலசமயம் சிறுசிறு கருத்து வேறு பாடுகள் உருவானாலும், அவற்றை நீக்கிவிட்டு கூட்டுமுறையில் கைகோர்த்து பாடுபட்டு வெற்றிகளைக் குவிக்கலாம். "கூட்டுறவே நாட்டுயர்வு,' என்ற பழமொழிக்கும், "ஊர் கூடித் தேரை இழுக்க வேண்டும்' என்ற பழமொழிக்கும் இசைவாக காரியங்களை சாதிக்கலாம். ஜென்ம ராசியிலுள்ள கூட்டு கிரகங்களின் பலன் இதுவே. 5-ல் சனி, கேது- சிலசமயம் உங்களுக்கு சிந்தையில் சந்தேகத்தை எழுப்பினாலும், "தெளிவில்லாத நெஞ்சம் தெளியட்டும்' என்று கலைஞர் வசனம் எழுதியபோல தெளிந்து, தேர்ந்து செயலாற்றலாம். 11-ல் உள்ள ராகு பக்கபலமாக தக்க தருணத்தில் வெற்றிக்குத் துணைபுரிவார். 5, 8-க்குடைய குரு 10-ஆமிடத்தைப் பார்ப்பதால் தொழில்துறையிலும் வேலைத்தடத் திலும் பிரச்சினைகளை உருவாக்கினாலும் திட்டமிட்டபடி செயல்படுத்தலாம்.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிக்கு 12-ல் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் நால்வரும் மறைகிறார்கள். 4, 7-க்குடைய குருவும் 3-ல் மறைவு. ஜென்ம ராசிக்கு 6-க்குடைய சனி பார்வை. எனவே எல்லா வகையிலும் முன்னெச்சரிக்கை யாகவும், உஷார் நிலையிலும் செயல்பட வேண்டும். தொழில்துறை, வியாபாரத்தில் இருப்பவர்கள் எல்லாவற்றையும் தன் நேரடி நிர்வாகத்திலும் கண்காணிப்பிலும் வைத்துக் கொள்ள வேண்டும். "உடையவன் இல்லா விட்டால் ஒரு முழம் கட்டை' என்பார்கள். அதேபோல "தான் பார்க்கவேண்டிய வேலைக்கு தம்பியை அனுப்பினால் ஆகாது' என்பார்கள். நீங்கள் நூறு ரூபாயில் முடிக்கும் காரியத்தை மற்றவர்கள் இருநூறு ரூபாய் செலவழித்து முடிப்பார்கள். இதுதான் 12-ல் மறைந்துள்ள கிரகங்களின் பலன். என்றாலும் 10-ல் உள்ள ராகுவாலும், 10-ஆமிடத்தைப் பார்க்கும் சனியாலும் கேதுவாலும் பிரச் சினைகள் காணப்பட்டாலும், செயல்கள் முழுமையாக நிறைவேறும். 7-ஆமிடத்தை 7-க்குடைய குரு பார்ப்பதால் உங்கள் வெற்றிக்கு மனைவியோ, தாயாரோ துணை நிற்பார்கள். அதாவது குரு 4-ஆமிடத்துக்கும், 7-ஆமிடத்துக்கும் உரியவர். அதனால்தான் "தாய்க்குப் பின் தாரம்' என்று பெரியவர்கள் சொன்னார்கள். அதுமட்டுமல்ல; இதன் உள்ளர்த்தம் என்னவென்றால், ஒவ்வொரு வரின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருக் கிறார் என்று பெரியவர்கள் சொன்னார்கள்.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் சுக்கிரன் 11-ல் இருக் கிறார். அவருடன் சூரியன், செவ்வாய், புதன் ஆகிய மூவரும் சேர்க்கை. ஆக, இந்த நால்வருமே சுக்கிரனுடைய நட்சத்திரமான பூரத்தில் இருக்கிறார்கள். எனவே சுக்கிரன் அஸ்தமனமாக இருந்தாலும் தோஷம் செய்யமாட்டார். துலா ராசிக்கு ராஜயோகாதி பதியான சனி இதுவரை வக்ரமாக இருந்தார். இப்போது 2-ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைவார். எனவே, உடன்பிறந் தவர்கள் வகையிலும், நண்பர்கள் வகையிலும் கடந்த காலத்தில் நிலவிய கருத்து வேறுபாடு களும் மனவருத்தங்களும் நீங்கி இணைந்த கைகளாக செயல்படலாம். பொதுவாக 11-ல் சூரியன் நிற்கும்படி ஒரு முகூர்த்த லக்னத்தை வைத்தால் அந்தக் காரியம் வாழ்வாங்கு வளமோடு விளங்கும் என்பது ஜோதிட விதி. இங்கு சூரியனோடு ராசிநாதன் சுக்கிரனும், பாக்கியாதிபதி புதனும், தன சப்தமாதிபதி செவ்வாயும் சேர்ந்திருப்பதால், எல்லா வகை யிலும் தொல்லைகள் நீங்கி எல்லையில்லா வெற்றியும் ஈடில்லா நிறைவும் அடையலாம். தனகாரகன், வாக்குகாரகனாகிய குரு 2-ல் நின்று செவ்வாயின் பார்வையைப் பெறுவ தால் சொல்வளமும் செல்வவளமும் நிறைவாகத் திகழும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிக்கு 2020 மார்ச்வரை ஏழரைச்சனி நடக்கிறது. அந்த சனியுடன் கேதுவும் சம்பந்தம்; ராகு பார்வை. "வாக்குச் சனி கோப்பைக் குலைக்கும்' என்று சொல்வார்கள். அதேபோல "ஆக்கங்கெட்ட மாட்டை போக் கிலே விட்டுத் திருப்பு' என்றும் சொல்வார்கள். ராகு, கேது, சனி இவர்களின் தசாபுக்தி நடப் பவர்களுக்கு மேலே எழுதிய விதி அப்படியே பொருந்தும். ஆகவே எண்ணம், பேச்சு, செயல் மூன்றிலும் பக்குவம் தேவை. நல்லது சொன் னாலும் பொல்லாப்பு விளையும் நேரமிது. ஆகவே, சிந்தித்துப் பேசுக. சிலசமயம் பேசா திருந்தும் பழகுக. ஜென்ம குரு உங்கள் மரியா தையையும் கௌரவத்தையும் காப்பாற்று வார் என்றாலும், பொருளாதாரத்தில் தேக்கத் தையும் ஏக்கத்தையும் ஏற்படுத்துவார். பற்றாக் குறை பட்ஜெட்டை சரிசெய்யவேண்டும். ராசி நாதன் செவ்வாய் 10-ல் சூரியன், சுக்கிரன், புதனோடு சேர்ந்திருப்பதால், வாழ்க்கை அல்லது தொழில் அல்லது வேலை இவற்றில் பாதிப் புக்கு இடமில்லை. அதேசமயம் இந்த நால் வரும் சுக்கிரன் சாரம் பெறுவதால் (பூரம்) கிரக யுத்தம் எனப்படும். அதனால் எல்லாவற்றிலும் டென்ஷன் அதிகமாக அமையும். மிகவும் பொறுமை தேவைப்படும். பொறுமையால் பகைமையை விரட்டியடிக்கலாம்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிநாதன் குரு 12-ல் மறைவு. ஜென்ம ராசியில் சனி, கேது. 7-ல் ராகு. ஆதலால் ஜென்மச்சனி நடக்கிறது. காரணமில்லாமல் பகை, வருத்தங்களும், கற்பனை பயங்களும் உங்களை ஆட்டிப் படைக்கும் நேரமிது. "கணக்கன் கணக்கறிவான் தன் கணக்கைத் தானே அறியான்' என்று ஒரு பழமொழி உண்டு. அதுபோல சனி, ராகு, கேது உங்கள் கணக்கை யும் அறியவிடமாட்டார். பிணக்குகளையும் காரணமில்லாமல் வளர்த்துவிடுவார். கிரேக்க நாட்டுப் பேரறிஞர் சாக்ரடீஸ், "உன்னையே நீ உணர்வாய்' என்று சொன்னது மாதிரி, உங்களை நீங்களே உணர்ந்தால் சனி, ராகு- கேது மூவரும் உங்களைப் பதம் பார்க்காமல் ஒதுங்கிவிடுவார்கள். 9-க்குடைய சூரியனும் 10-க்குடைய புதனும் ஒன்றுகூடி 9-ல் இணைவதால், தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுகிறது. அதனால் சோதனைக்கும் வேதனைக்கும் இடமில்லை என்றாலும், காரணமில்லாத வாதனை உங்களை வாட்டி வதைக்கிறது. அதன் மூலகாரணத்தைக் கண்டு பிடித்து செயல்பட்டால் சாதனை படைக்க லாம். சோதனையில் ஜெயிக்கலாம். ஏழரைச் சனி சிலருக்கு மங்குசனியாகவும், சிலருக்கு பொங்கு சனியாகவும் பலன் செய்கிறது. அது அவரவருடைய ஜாதக அமைப்பைப் பொருத்தது.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிநாதன் சனி 12-ல் மறைகிறார். 12 என்பது விரய ஸ்தானம். அவருக்கு வீடுகொடுத்த குரு அவருக்கும் 12-ல் மறைகிறார். சனியோடு கேது சம்பந்தம்; ராகு பார்வை. வாக்கு ஸ்தானத்தை சனியும் கேதுவும் பார்ப்பதால், "ஒரு வார்த்தை வெல்லும்; ஒரு வார்த்தை கொல்லும்' எனும் விதிப்படி உங்கள் பேச்சும் வாக்கும் நல்லதையும் செய்யும்; பொல்லாததையும் செய்யும். யாரிடமும் சொல்லக்கூடாது என்று உங்களிடம் ஒரு ரகசியத்தைச் சொன்னால் அவர்களிடமே யதார்த்தமாகச் சொல்லிலி பக்கவிளைவுகளை உருவாக்கி விடுவீர்கள். ஒரு குட்டிக்கதை; உண்மைச் சம்பவம். பௌர்ணமி நிலவன்று ஒருவரைக் கொலைசெய்து கண்காணாத இடத்தில் புதைத்துவிட்டார் ஒருவர். கொலை செய்யப்பட்டவர் இறக்கும் தறுவாயில் "இந்த நிலவே சாட்சி' என்று சொல்லிலி மரித்தார். ஆண்டுகள் ஓடிவிட்டன. கொலை யாளியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு பௌர்ணமியில் கொலைகாரன் மனைவியோடு நிலாச்சோறு சாப்பிடும்போது மேற்படி நிகழ்வு அவன் நினைவுக்கு வர, சிரித்துவிட்டான். அவன் மனைவியோ, "யாரை நினைத்துச் சிரித்தாய்? சின்னவீட்டை நினைத்து சிரித்தாயா' என்று வம்பு பண்ண, அவன் உண்மையைச் சொல்லிலிவிட்டான். அவள் பக்கத்து வீட்டுத் தோழியிடம் சொல்ல, தோழியின் கணவர் காவல்துறை அதிகாரியாவார். அவரிடம் சொல்ல, காவல்துறை கொலைகாரனைக் கைது செய்து விசாரித்து உண்மையைத் தெரிந்துகொண்டார்கள். ஆக, நிலவே சாட்சியாக அமைந்துவிட்டது.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிநாதன் சனி 11-ல் பலம்பெற்று தன் ராசியைப் பார்க்கிறார். 3, 10-க்குடைய செவ்வாயும், அவருடன் சேர்ந்த சூரியனும், புதனும், சுக்கிரனும் ராசியைப் பார்க் கிறார்கள். 2, 11-க்குடைய குரு 10-ல் இருந்து 2-ஆமிடத்தைப் பார்க்கிறார். குடும்பச் சூழ் நிலையிலும் பொருளாதாரத்திலும் எந்தப் பிரச்சினைகளுக்கும் இடமில்லை. அதே போல உங்கள் தேவைகள் திருப்திகரமாகப் பூர்த்தியாகும். "குறை ஒன்றுமில்லை; மறைமூர்த்தி கண்ணா' என்ற பாடலுக்கு ஏற்றமாதிரி வாழ்க்கையில் எந்தக் குறையும் சொல்ல முடியாவிட்டாலும், 5-ஆம் இடத்து ராகுவும் அவரைப் பார்க்கும் சனியும் கேதுவும் நிறைவில்லாத நிலையை ஏற்படுத்துகிறது. 9-க்குடைய சுக்கிரனும், 10-க்குடைய செவ்வாயும் 7-ல் அமர்ந்து ராசியைப் பார்ப்பதால் தர்ம கர்மாதிபதியின் பலன் உங்களை வழிநடத்துவதால் குறை களையப்பட்டு நிறைவாகும். 5-ஆமிடத்து ராகு ஒருசிலருக்கு புத்திர தோஷத்தை ஏற்படுத்தலாம். ஒருசிலருக்கு புத்திர சோகத்தை ஏற்படுத்தலாம். ஒருசிலருக்குப் புத்திரரால் சங்கடத்தை உருவாக்கலாம். அவரவர் ஜாதகப்படி தசாபுக்திகளை அனுசரித்து தேவையான பரிகாரங்களைத் தேடிக்கொண்டால் 5-ஆமிடத்து ராகுவின் கெடுதலை மாற்றியமைக்கலாம்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிநாதன் குரு 9-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். குரு 10-க்குடையவராவார். அவர் 9-ல் இருப்பதால் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுகிறது. ஆதலால் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய நால்வரும் 6-ல் மறைவ தால் ஏற்படும் தோஷம் நிவர்த்தியாகிறது. 4-ல் ராகு, 10-ல் சனி, கேது நிற்பதால், சிலருக்கு ஆரோக்கியத்தில் பிரச்சினை; சிலருக்கு வாழ்க்கையில் பிரச்சினை; சிலருக்கு தொழில், வேலை, உத்தியோகம் இவற்றில் பிரச்சினை. தர்மகர்மாதிபதி யோகத்தாலும், ராசிநாதனே ராசியைப் பார்க்கும் யோகத்தாலும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் பரிகாரமாக அமைந்துவிடுகிறது. "மங்கை சூதகமானால் கங்கையில் மூழ்குவாள்; கங்கை சூதகமானால் எங்கு மூழ்குவாள்' என்று ஒரு ஆன்மிக அரசியல்வாதி கேள்வி எழுப்பினார். கங்கைக்கு சூதகமே இல்லை என்பதே அந்தக் கேள்வியின் பொருள். விஷம் விஷத்தை முறியடிக்கும். முள்ளை முள்ளால் எடுக்கலாம். அழுக்கை அழுக்கே போக்கும். மீன ராசியை குரு பார்ப்பதோடு செவ்வாயும் பார்ப்பது பலமாகிறது. ஆகவே கெட்ட நேரத்திலும் நல்லநேரம் என்றுசொல்வதுபோல உங்களுக்கு எல்லாம் நல்லதே நடக்கும்.